மிருணாளினியின் 'அட்வைஸ்'

தினமலர்  தினமலர்
மிருணாளினியின் அட்வைஸ்

டிக்-டாக்கில் பிரபலமான மிருணாளினி இப்போது சினிமாவில் நாயகியாக வலம் வருகிறார். இவர் கூறுகையில், நீங்கள் அருகில் வசிக்கும் இடங்களில் யாரோனும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டால் தயவு செய்து அவர்களை போட்டோ எடுக்காதீர்கள். மாறாக கட்டை விரலை உயர்த்தி குணமடைந்து திரும்புங்கள் என வாழ்த்தி அவருக்கு நம்பிக்கை கொடுங்கள். இந்த நோய் தொற்று ஏற்பட்டவர் குற்றவாளி இல்லை. அவர்களை அவதூறு செய்யாதீர்கள், பயமுறுத்தாதீர்கள். அன்பை செலுத்துங்கள். நாளைக்கு நமக்கும் இந்த நோய் தொற்று ஏற்படலாம். பாதுகாப்பாகவும், நம்பிக்கையோடும் இருங்கள் என்கிறார்.

மூலக்கதை