அண்ணாத்த பற்றி தினம் ஒரு தகவல் : ரஜினி-நயன்தாராவின் மகளாக கீர்த்தி சுரேஷ்?

தினமலர்  தினமலர்
அண்ணாத்த பற்றி தினம் ஒரு தகவல் : ரஜினிநயன்தாராவின் மகளாக கீர்த்தி சுரேஷ்?

முன்னணி நடிகர்கள் படம் என்றாலே இது தான் கதை என அவ்வப்போது ஏதாவது ஒரு கதை இணையத்தில் வைரலாவது வழக்கம் தான். அந்தவகையில் இதுதான் ரஜினியின் அண்ணாத்த படக்கதை என தற்போது ஒரு கதை இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி, ரஜினிக்கு குஷ்பு மற்றும் மீனா இருவரும் அத்தைப் பெண்கள். படையப்பா ஸ்டைலில் அத்தைப் பெண்களை வேண்டாம் என மறுத்து விட்டு, மனதிற்குப் பிடித்த பெண்ணை மணம் புரிகிறார் ரஜினி. அந்தப் பெண் தான் நயன்தாராவாம். ஆண்டுகள் ஓட, ரஜினி - நயன் தம்பதியின் ஒரே மகள் கீர்த்தி சுரேஷ்.

ரஜினியை ஜோடியாக்க முடியாத சோகத்தில் இருக்கும் குஷ்பு மற்றும் மீனா, கீர்த்தி சுரேஷை தங்கள் வீட்டு மருமகளாக்க போட்டி போடுகிறார்களாம். அதில் ஏற்படும் சிக்கல்களும், பிரச்சினைகளும் தான் படத்தின் கதைக்களமாம்.

சென்டிமெண்ட் கதைகளுக்குப் பேர் போனவர் சிவா என்பதால், அண்ணாத்த படமும் இப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் இந்தக் கதையை சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

ஆனால் படத்திற்கு அண்ணாத்த எனப் பேர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கதையில் அது தொடர்பாக எதுவுமே இல்லை. அதோடு தொடர்ந்து நாயகியாக நடித்து வரும் நயன், தர்பார் படத்திலேயே ரஜினிக்கு வயதைக் காரணம் காட்டி ஜோடியாகவில்லை. அப்படி இருக்கையில் கீர்த்தி சுரேஷுக்கு தாயாக அவர் நடிக்கிறார் என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நிச்சயம் இது அண்ணாத்தே படக் கதையாக இருக்க முடியாது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிகிறது. பார்ப்போம் அண்ணாத்தே பட ரிலீசுக்குள் இன்னும் எத்தனைக் கதைகள் இப்படி இணையத்தில் உலா வருகிறது என்று.

மூலக்கதை