கொரோனா சிகிச்சைக்கு கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்டோர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

தினகரன்  தினகரன்
கொரோனா சிகிச்சைக்கு கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்டோர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

டெல்லி: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியன இணைந்து கொரோனாவை குணப்படுத்த கோவாக்சின் என்னும் மருந்தை தயாரித்துள்ளன.\r இந்த மருந்தை 12 மருத்துவமனைகளில் ஆட்களுக்குச் சோதனை முறையில் செலுத்தத் திட்டமிடப்பட்டது. காட்டாங்குளத்தூர் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் இதுவரை தன்னார்வலர்கள் 50 பேருக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அவர்களின் உடல்நலத்தைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் 9 பேருக்கு இன்று மருந்து செலுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\r பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில், அந்த மருந்து மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது என்பது உறுதியாகியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை