ஜப்பானில் துவங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை

தினமலர்  தினமலர்
ஜப்பானில் துவங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது என முன்னதாக ஜப்பான் அரசு அறிவித்திருந்தது. கொரோனாவின் முதல் அலை அந்நாட்டில் 'ஜப்பான் மாடல்' என அழைக்கப்பட்டது. இந்த ஜப்பான் மாடல் படிப்படியாகக் குறைந்து தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அங்கு கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் துவங்கி, பலர் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தாக்கம் குறைந்ததால் அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு பொது இடங்கள் திறக்கப்பட்டன. மக்களும் மாஸ்க் அணிந்தபடி தங்கள் அன்றாட வேலையில் மூழ்கத் துவங்கினர். கொரோனா வைரஸ் பொதுவாக நாள்பட்ட நோய்த்தாக்கம் கொண்ட முதியவர்களையே அதிகமாகத் தாக்குகிறது. எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இளைஞர்கள் இதிலிருந்து தப்பி விடுகின்றனர். ஆனால் ஜப்பானில்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வயோதிகர்கள் உள்ளனர். ஜப்பானின் சராசரி இறப்பு வயது எண்பது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்ந்து முதியவர்களைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மற்ற நாடுகளைவிட ஜப்பான் கொரோனாவைக் கண்டு அதிகமாக அஞ்சுகிறது.


ஷோவா மருத்துவ பல்கலைக்கழக நோய்த்தொற்று நிபுணர் யோஷிஹிட்டோ நிகி கூறுகையில், நோய்தொற்று பரவலை விட பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசு முன்னுரிமை அளித்ததன் விளைவாக தொற்று அதிகமாக பரவுகிறது என்றார். ஜப்பான் இரவு விடுதிகளில் திறக்கப்பட்டதால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதாக முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. அதனால் மாலை 6 மணிக்கு மேல் செயல்படும் உணவகங்கள் பார்கள் ஆகியவற்றைமூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை