Exclusive ஏழைகளுக்காக ‘மகிழ்மதி இயக்கம்’ தொடங்கினார் திவ்யா சத்யராஜ்

FILMI STREET  FILMI STREET
Exclusive ஏழைகளுக்காக ‘மகிழ்மதி இயக்கம்’ தொடங்கினார் திவ்யா சத்யராஜ்

புரட்சித் தமிழன் சத்யராஜின் மகள் திவ்யா.

இவர் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமான ஊட்டச்சத்து நிபுணர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

அண்மையில் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பெரும் இழப்புகளளச் சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் அரசுக்கு கோரிக்கை வைத்தார் திவ்யா.

இந்த நிலையில் ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இது ஆரோக்கியத்திற்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

இந்தியாவில் ஒர் ஆண்டின் கணக்கின் படி 10 மில்லியன் திருமணங்கள் நடைபெறுகிறது.

அத்திருமணவிழாக்களில் பரிமாறப்படும் 30 விழுக்காடு உணவு வீணாகிறது.

உணவும், ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டுந்தான் என்பது நியாயம் இல்லை.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்த்தினரும், குழந்தைகளும் கொரோனா தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை.

‘மகிழ்மதி இயக்கம்’ அரசியல் கட்சியோ,, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்குகிறோம்

கொரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம் மேற்கொள்ளும் ‘மகிழ்மதி இயக்கம்’ என் கனவு.

என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது , ‘மகிழ்மதி’ என்ற பெயர் தோன்றியது. என் அம்மா பெயர் மகேஸ்வரியின் முதல் பாதியை என் இயக்கத்தின் பெயரில் இணைக்கவேண்டும் என்பது என் ஆசை”. என்கிறார் இந்த புரட்சிப் பெண்.

Divya Sathyaraj starts the Mahilmadhi movement

மூலக்கதை