மெக்ஸிகோவில் அதிகரிக்கும் கொரோனா; அதிபருக்கெதிராகக் கிளம்பும் எதிர்க்கட்சிகள்

தினமலர்  தினமலர்
மெக்ஸிகோவில் அதிகரிக்கும் கொரோனா; அதிபருக்கெதிராகக் கிளம்பும் எதிர்க்கட்சிகள்

மெக்ஸிகோ: மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ்-ன் கட்சியான இன்ஸ்டிடியூஷனல் ரெவல்யூஷனரி கட்சி கொரோனா தாக்கத்தை முன்னிட்டு கடும் எதிர்ப்பினை எதிர்க்கட்சிகளிடமிருந்து பெற்று வருகிறது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்காவை அடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்தில் மெக்ஸிகோ ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 688 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மெக்ஸிகோவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்து 688 ஆனது. இதனால் பிரிட்டனின் பலி எண்ணிக்கையை மெக்ஸிகோ முந்தி கொரோனா உயிரிழப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரிட்டனில் 46 ஆயிரத்து 119 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பிரிட்டனைக் காட்டிலும் மெக்ஸிகோ இருமடங்கு ஜனத்தொகை கொண்டது. இதுவரை மெக்ஸிகோவில் 4 லட்சத்து 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெக்ஸிகோவில் கொரோனாவுக்கு எதிராக சரியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சியைச் சேர்ந்த 9 மாநில கவர்னர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை