வழிகாட்டும் ‘240’ பக்கம் * பி.சி.சி.ஐ., புதிய முடிவு | ஜூலை 31, 2020

தினமலர்  தினமலர்
வழிகாட்டும் ‘240’ பக்கம் * பி.சி.சி.ஐ., புதிய முடிவு | ஜூலை 31, 2020

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீரர்களுக்கு 240 பக்க அறிக்கை வழிகாட்ட உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.ஐ.,) 13வது ஐ.பி.எல்., தொடர் வரும் செப். 19ல் துவங்க உள்ளது. இத்தொடரை பாதுகாப்பான முறையில் நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டு வருகிறது.

இதற்காக 240 பக்கங்கள் கொண்ட புதிய செயல் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. இதன் படி, யு.ஏ.இ., கிளம்பும் முன் வீரர்களுக்கு இரண்டு கட்ட கொரோனா சோதனை நடத்தப்படும். இதில் தேறிய வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும், உயர்மட்ட கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவர்.

இதன் பின் இந்த வளையத்தை விட்டு யாரும் வெளியே செல்லக் கூடாது. தவிர துவக்க விழாவில் யார் யார் எங்கு, எவ்வளவு துாரத்தில் நிற்க வேண்டும், போட்டி முடிந்த பின் பரிசளிப்பு விழா எப்படி நடக்க வேண்டும், தொடர் முடிவில் எப்படி கிளம்புவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

அணி உரிமையாளர்களிடம் இன்னும் அறிக்கை தரப்படவில்லை. போட்டி அட்டவணை முடிவு செய்யப்பட்டதும் பாதுகாப்பு விதிகள் குறித்து தெரிவிக்கப்பட உள்ளது.

மூலக்கதை