கிரிக்கெட் மீது ‘காதல்’ இல்லை * வில்லே புலம்பல் | ஜூலை 31, 2020

தினமலர்  தினமலர்
கிரிக்கெட் மீது ‘காதல்’ இல்லை * வில்லே புலம்பல் | ஜூலை 31, 2020

சவுத்தாம்ப்டன்: ‘‘உலக கோப்பை தொடர் அணியில் இருந்து நீக்கப்பட்டதால், கிரிக்கெட் மீதான ‘காதல்’ போய்விட்டது,’’ என வில்லே தெரிவித்தார்.

இங்கிலாந்து, அயர்லாந்து மோதிய முதல் ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. இதில் அயர்லாந்தை (172/10), இங்கிலாந்து அணி (174/4) 6 விக்கெட்டில் வென்றது. இதில் ஐந்து விக்கெட் சாய்த்தார் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே 30.

கடந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார். இவரது இடம் ஆர்ச்சருக்கு சென்றது. மீண்டும் அணிக்கு திரும்பிய இவர், முதல் போட்டியில் அசத்தினார்.

வில்லே கூறியது:

உலக கோப்பை அணி அறிவிப்பின் போது அபுதாபி ‘டி 10’ தொடரில் விளையாடிக் கொண்டிருந்தேன். எனக்கு இடம் கிடைக்கவில்லை என்றதும், மைதானத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. மீண்டும் அங்கு செல்ல விருப்பம் இல்லை.

ஓட்டலுக்கு செல்லவே மனது துடித்தது. கிரிக்கெட் மீதான ‘காதல்’ அப்படியே போய்விட்டது என நினைத்தேன். மீண்டும் கடினமாக முயற்சித்து, அணிக்கு திரும்பினேன். தற்போது சரியான பாதையில் செல்கிறேன் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை