ரசிகர்களுக்கு அனுமதி * ஐ.பி.எல்., காண... | ஜூலை 31, 2020

தினமலர்  தினமலர்
ரசிகர்களுக்கு அனுமதி * ஐ.பி.எல்., காண... | ஜூலை 31, 2020

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடர் போட்டிகளை காண 30 முதல் 50 சதவீத ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிகிறது. 

கொரோனா காரணமாக தடைபட்ட 13வது ஐ.பி.எல்., தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) மண்ணில் நடக்கவுள்ளது. வரும் செப். 19–நவ. 8ல் நடக்கவுள்ள இத்தொடருக்கு இன்னும் மத்திய அரசு அனுமதி தரவில்லை. 

இதனிடையே யு.ஏ.இ.,ல் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி தரப்பட உள்ளது. யு.ஏ.இ., கிரிக்கெட் போர்டு செயலர் முபாஷிர் உஸ்மானி கூறியது:

இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து அனுமதி வந்த பின், எங்களது அரசிடம் அனுமதி கேட்போம். தவிர தொடரை நேரடியாக கண்டு களிக்கும் எங்கள் மக்களுக்கு அளிப்பதில் உறுதியாக உள்ளோம். இருப்பினும் அரசின் முடிவு தான் இறுதியானது. பெரும்பாலான போட்டிகள் 30 முதல் 50 சதவீத ரசிகர்களுடன் நடந்தன. ஐ.பி.எல்., தொடருக்கும் இதுபோல அனுமதிக்க திட்டமிட்டுளோம். 

யு.ஏ.இ.,ல் தனியார் கட்டமைப்புகள் அதிகம் உள்ளன. இதனால் எட்டு அணி வீரர்கள் பயிற்சிக்கு எவ்வித சிக்கலும் இருக்காது. ஏற்கனவே 14 அணிகள் மோதிய ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் தகுதிச்சுற்று நடத்தியுள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

 

நிதி கிடைக்கும்

முபாஷிர் உஸ்மானி கூறுகையில்,‘‘2014ல் ஐ.பி.எல்., தொடரின் முதல் 20 போட்டிகள் இங்கு நடந்தன. இது யு.ஏ.இ., பொருளாதாரத்துக்கு சற்று கைகொடுத்தது. இம்முறை முழு தொடர் நடந்தால், எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்,’’ என்றார்.

மூலக்கதை