என்னையும் சேர்த்துக்கங்க... ப்ளீஸ் * கெஞ்சுகிறார் மஞ்ச்ரேகர் | ஜூலை 31, 2020

தினமலர்  தினமலர்
என்னையும் சேர்த்துக்கங்க... ப்ளீஸ் * கெஞ்சுகிறார் மஞ்ச்ரேகர் | ஜூலை 31, 2020

 புதுடில்லி: ஐ.பி.எல்., வர்ணனை குழுவில் சேர்க்குமாறு மஞ்ச்ரேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் 55. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வர்ணனையாளர் குழுவில் இருந்தார். இந்திய வீரர் ஜடேஜா குறித்து இவர் தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 

இதனிடையே, கொரோனாவால் ரத்தான இந்தியா–தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடருக்கு முன், வர்ணனை குழுவில் இருந்து மஞ்ச்ரேகர் நீக்கப்பட்டார். 13வது ஐ.பி.எல்., தொடர் துவங்க ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், மீண்டும் தன்னை சேர்க்குமாறு ‘இ–மெயில்’ வழியாக கோரிக்கை விடுத்துள்ளார். 

அதில்,‘‘ஐ.பி.எல்., தொடருக்கு விரைவில் வர்ணனையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உங்களது வழிகாட்டுதல் படி, இணைந்து பணி செய்ய தயாராக உள்ளேன்,’ என தெரிவித்துள்ளார். 

பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ஜடேஜா குறித்த கருத்துக்கு ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டார். அந்த பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது. சிறந்த கிரிக்கெட் அறிவுள்ள இவர், விதிகளை கண்டிப்பாக பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்,’’ என்றார்.

மூலக்கதை