ஆட்டிப்படைக்கும் கொரோனா....! இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது; கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஆட்டிப்படைக்கும் கொரோனா....! இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது; கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஜூலை 27-ம் தேதி வரை இந்தியா முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிப்படையாக அறிவித்து வந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியதால், கடந்த 28-ம்தேதி முதல் மொத்த பாதிப்பு தகவல் வெளியிப்படவில்லை. குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றுபவர்களின் விவரங்ளை வெளியிட்டு வருகிறது. இதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 36,511 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 10,94,374 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 36,569 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,65,103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 16,95,988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 14,994 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,56,158 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,50,966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 3,963 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,20,930 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 10,705பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,935 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,83,956 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 57,968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை