சீனாவை சாடிய அமெரிக்க அமைச்சர்

தினமலர்  தினமலர்
சீனாவை சாடிய அமெரிக்க அமைச்சர்

புதுடில்லி : கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருப்போருக்கு, பொது மன்னிப்பு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

உலகிலேயே, இந்தியாவில் தான், தனியாரிடம் மிக அதிக அளவு தங்கம் உள்ளது.இந்திய குடும்பங்களில், 25 லட்சம் டன் தங்கம் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதையடுத்து, தங்கம் இறக்குமதியை குறைக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும், பொது மன்னிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏராளமானோரிடம் கணக்கில் காட்டாத தங்கம் உள்ளது.

அவற்றை தாமாக முன்வந்து, வருமான வரித் துறையிடம் தெரிவித்து, உரிய வரி மற்றும் அபராதம் செலுத்தும், பொது மன்னிப்பு திட்டம் குறித்து, மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.இதன்படி கணக்கு காட்டுவோர் மீது, எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதேசமயம், கணக்கில் காட்டப்படும் தங்கத்தின் ஒரு பகுதியை, குறிப்பிட்ட காலத்திற்கு 'டெபாசிட்' செய்யக் கோரும் விதிமுறை இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை