இணையத்தில் வைரலாகும் பூமியின் புகைப்படம்

தினமலர்  தினமலர்
இணையத்தில் வைரலாகும் பூமியின் புகைப்படம்

வாஷிங்டன்: நாசா உள்ளிட்ட அமைப்புகள் அவ்வப்போது விண்வெளியிலிருந்து பூமியின் புகைப்படங்களை வெளியிடும். நாசா செயற்கைக் கோள்கள் அவ்வப்போது எடுக்கும் இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். இதனைத்தொடர்ந்து தற்போது பூமியின் பரப்பு மிக அருகில் இருந்து எடுக்கப்பட்ட ஒர் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வலைதளத்தில் 20,000 பார்வையாளர்களைப் பெற்ற இந்த புகைப்படம் 2,300 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை விண்வெளி வீரர் டாக் ஹார்லி வெளியிட்டுள்ளார். 'இதோ..! நம்முடைய அழகான ப்ளூ மார்பிள்' என கேப்ஷன் இடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் நீல நிற பூமியின் கடல் பரப்பை அழகாகக் காட்சிப்படுத்துகிறது. எவ்வளவு அழகாக காட்சியளிக்கிறது. நமது பூமித்தாய் இவளைப் போற்றிப் பாதுகாத்து பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை என இதற்கு சிலர் டுவீட் செய்துள்ளனர்.


மூலக்கதை