பஹ்ரைனில் கொரோனாவில் இருந்து புதிதாக 437 பேர் மீட்பு

தினமலர்  தினமலர்
பஹ்ரைனில் கொரோனாவில் இருந்து புதிதாக 437 பேர் மீட்பு

பனாமா : பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 437 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பஹ்ரைனில் தொற்று பாதிப்புகளை குறைக்க அந்நாட்டு அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பஹ்ரைனில் இன்று புதிதாக 444 பேர் நோய் தொற்றில் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 40,755 ஆக அதிகரித்தது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 147 பேர் பலியாகியுள்ளனர்.


பஹ்ரைனில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 437 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் குணமடைந்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 37,357 ஆக உயர்ந்தது. தற்போது 3,252 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 41 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

மூலக்கதை