‘2ஜி போன்களை புராதன பொருளாக்க வேண்டும்’

தினமலர்  தினமலர்
‘2ஜி போன்களை புராதன பொருளாக்க வேண்டும்’

புதுடில்லி:இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் துவங்கிய, ‘2ஜி’ சேவையை இன்னும் வைத்துக் கொண்டிருக்காமல், அதை வரலாற்றின் ஒரு பகுதியாக, புராதன பொருளாக மாற்றும் கொள்கை முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என, முகேஷ் அம்பானி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில், மொபைல்போன் அறிமுகமாகி, 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, முகேஷ் அம்பானி இப்படி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.இந்தியாவும், பிற நாடுகளும், ‘5ஜி’ சகாப்தத்தில் நுழைந்திருக்கும் சமயத்தில், இன்னும், 30 கோடி சந்தாதாரர்கள், 2ஜி தொலைபேசிகளுடன், அடிப்படை இணைய சேவை கூட இல்லாமல் இருக்கின்றனர்.இந்நிலையில், 2ஜி போன்களை வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள், மிக அவசரமாக எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்மையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் அங்கமான ஜியோ, அடிப்படை போனான, 2ஜி போன் வைத்திருப்பவர்களை, ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களாக மாற்றும் முயற்சியில் இறங்க இருப்பதாக, முகேஷ்அம்பானி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், மொபைல் போனின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, இத்தகைய அறைகூவலை அவர் விடுத்துள்ளார்.

மூலக்கதை