ஜூனில் நிதிப் பற்றாக்குறை 83.2 சதவீதத்தை எட்டியது

தினமலர்  தினமலர்
ஜூனில் நிதிப் பற்றாக்குறை 83.2 சதவீதத்தை எட்டியது

புதுடில்லி:நாட்டின் நிதிப் பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பீட்டில், 83.2 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பீட்டில், 83.2 சதவீதத்தை எட்டிஉள்ளது.இக்காலாண்டில், நிதிப் பற்றாக்குறை, 6.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 61.4 சதவீதமாக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த, நாட்டின் வரவு – செலவு திட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை, 7.96 லட்சம் கோடி ரூபாய் என, அரசு நிர்ணயித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.5 சதவீதமாகும். இருப்பினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை கணக்கில் கொண்டு, இந்த புள்ளி விபரங்கள் கணிசமாக திருத்தப்பட வேண்டியதுஇருக்கும்.

கடந்த, 2019- – 20ம் நிதியாண்டில், ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில், நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.6 சதவீதமாக உயர்ந்தது. மார்ச் மாதத்தில், கொரோனாவால் நாடு முடக்கப்பட்டதை அடுத்து, மோசமான வருவாய் நிலை ஏற்பட்ட தால், இந்த சரிவு ஏற்பட்டது.

மூலக்கதை