மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 7,543 பேர் டிஸ்சார்ஜ்

தினமலர்  தினமலர்
மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 7,543 பேர் டிஸ்சார்ஜ்

மும்பை:மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,543 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றனர்.இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.


மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 320 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 118 ஆக அதிகரித்தது.


இந்நிலையில் மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 60.68% என்ற அளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14,994 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை