கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 864 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தினமலர்  தினமலர்
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 864 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 864 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.

இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,027 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் மொத்தம் 10,495 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 19,140 பரிசோதனைகள் செய்யப்பட்டன.


ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,956 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 4 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் இதுவரை 74 பேர் மாநில அளவில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 54 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். 1,162 பேருக்கு நோயாளிகளின் தொடர்பில் தொற்று ஏற்பட்டது.

அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 320 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 132 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 130 பேருக்கும், வயநாடு மாவட்டத்தில் 124 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 89 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 84 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 83 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 75 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 60 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 59 பேருக்கும், கொல்லம் 53, காசர்கோடு மாவட்டத்தில் 52, ஆலப்புழாவில் 35, கண்ணூர் மாவட்டத்தில் 14 பேருக்கும் தொற்று நேற்று புதிதாக ஏற்பட்டுள்ளது.

தற்போது கேரளாவில் 1,43,323 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 1,33,151 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 10,172 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுவரை பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,956 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,027 ஆகவும் உள்ளது. இதன்படி மாநிலத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 54.4 சதவீதமாக உள்ளது. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மூலக்கதை