கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா

திருவனந்தபுரம்: ேகரள தங்கம் கடத்தல் வழக்கில் ரமீஸை என்ஐஏ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. விசாரணையில் அவர் என்ஐஏயிடம் கூறியதாவது: ெசாப்னாவும், சந்தீப் நாயரும் அடிக்கடி துபாய் வருவதுண்டு.

கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் 6 முறை துபாய் வந்துள்ளனர். அப்போது என்னையும், பைசல் பரீதையும் சந்தித்து பேசினர்.

தங்கம் கடத்தல் குறித்து நாங்கள் விவாதித்தோம். தூதரக பார்சலில் தங்கம் கடத்த அனைத்து வசதிகளையும் தான் செய்து தருவதாக சொப்னா என்னிடம் உறுதியளித்தார்.

அவர் கொடுத்த தைரியத்தால்தான் தூதரக பார்சலில் தங்கத்தை அனுப்ப தீர்மானித்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



இதற்கிடையே ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கடந்த சில ஆண்டுகளில் அவரது கணக்குக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது, யார்யாருடன் பொருளாதார ரீதியில் தொடர்பு வைத்திருந்தார் என்ற விபரங்களை சுங்க இலாகா மற்றும் என்ஐஏ சேகரித்து வருகின்றன. இது தொடர்பாக நேற்று சுங்க இலாகா திருவனந்தபுரத்தில் உள்ள அவரது ஆடிட்டரிடம் விசாரணை நடத்தியது.

பல மணிநேரம் நடந்த இந்த விசாரணையில் சிவசங்கர் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொண்ட பணி பரிவர்த்தனை குறித்த முழு விபரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சொப்னாவிடம் என்ஐஏ விசாரித்தபோது தங்க கடத்தல் குறித்து திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக அட்டாஷே என அழைக்கப்படும் ராஷித் காமிஸ் அல்சலாமியை தனக்கு நன்றாக தெரியும் என கூறினார்.

ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தும்போது, டாலர்களில் அவருக்கு பணம் கொடுத்ததாகவும் சொப்னா கூறினார். ஆனால் எவ்வளவு டாலர் என கேட்டபோது, முதலில் 1,000 டாலர் என கூறியவர், பின்னர் ஒவ்வொரு முறையும் 1,500 டாலர் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.



இதை திருவனந்தபுரத்தில் உள்ள ஏஜென்டிடம் இந்திய ரூபாயை டாலராக மாற்றி அட்டாஷேவுக்கு கொடுத்ததாகவும் ெசாப்னா கூறினார். இதையடுத்து நேற்று சுங்க இலாகாவினர் அந்த ஏஜென்டிடம் விசாரணை நடத்தினர்.

அதில் முக்கிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கம் கடத்தலில் அட்டாஷே ராஷித் காமிஸ் அல்சலாமிக்கும் தொடர்பு இருப்பதை சுங்க இலாகா உறுதி செய்துள்ளது.

இதையடுத்து அட்டாஷேவிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதியை கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை