பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி

* வழக்கம்போல் மாணவிகளே அதிக தேர்ச்சி
* கோவை மாவட்டம் முதலிடம்

சென்னை: பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. 96. 04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் அதிக அளவில் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்தது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 7249 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்தது.

இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்தவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 30 ஆயிரத்து 654 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்து இருந்தனர். இதில் பள்ளி வாயிலாக 8 லட்சத்து 15 ஆயிரத்து 442 பேர் தேர்வு எழுதினர்.

இதில் மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 881 பேர். மாணவர்கள் 3 லட்சத்து 79 ஆயிரத்து 561 பேர்.

பொது பாடப்பிரிவில் 7 லட்சத்து 63 ஆயிரத்து 424 பேர் தேர்வு எழுதினர். தொழிற் பாடப்பிரிவில் 52 ஆயிரத்து 18 பேர் எழுதியிருந்தனர்.



இந்த நிலையில் பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 96. 04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் மாணவியர் 97. 49 சதவீதம் பேர். மாணவர்கள் 94. 38 சதவீதம் பேர்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர் 3. 11 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகள் மூலமாக 8,15,442 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 7,83,160 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளிகள் 7249.

இதில் 2716 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. அரசு பள்ளிகள் 92. 71 சதவீதம், அரசு உதவி பெறு பள்ளிகள் 96. 95 சதவீதம், மெட்ரிக் பள்ளிகள் 99. 51 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 96. 20 சதவீதம், பெண்கள் பள்ளிகள் 97. 56 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 91. 77 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடப்பிரிவுகளை பொறுத்தவரை அறிவியல் பாடப்பிரிவுகளில் 96. 33 சதவீதம் பேரும், வணிகவியலில் 96. 28 சதவீதம், கலைப்பிரிவுகள் 94. 11 சதவீதம், தொழிற் பாடப்பிரிவுகள் 92. 77 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இயற்பியல் பாடப்பிரிவில் 96. 68 சதவீதம், வேதியியல் பாடப்பிரிவில் 99. 95 சதவீதம், உயிரியலில் 97. 64, கணிதம் 98. 56 சதவீதம், தாவரவியல் 93. 78 சதவீதம், விலங்கியல் 94. 53 சதவீதம், கணினி அறிவியல் 99. 25 சதவீதம், வணிகவியல் 96. 44 சதவீதம், கணக்குப் பதிவியல் 98. 16 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் கோவை மாவட்டத்தில் 98. 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் 97. 90 சதவீத தேர்ச்சியுடன் 2வது இடத்தையும், கரூர் மாவட்டத்தில் 97. 51 சதவீதம் பேர் ேதர்ச்சி பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். மாற்று திறனாளிகள் 2819 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 2672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 1 தேர்வில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 மறு தேர்வில் 180 பேர் தேர்ச்சி
பிளஸ் 2 இறுதி தேர்வு கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நடந்தது.

இதில் 34 ஆயிரம் பேர் தேர்வு எழுத முடியாமல் போயினர். இவர்களுக்கு கடந்த 27ம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வை 519 பேர் தான் எழுதினர். இந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் இரண்டு நாட்களில் திருத்தப்பட்டது.

தொடர்ந்து இந்த மறு தேர்வுக்கான ரிசல்ட் இன்று காலை வெளியிடப்பட்டது.

இந்த தேர்வில் 180 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

.

மூலக்கதை