இங்கிலாந்து அசத்தல் வெற்றி * ஐந்து விக்கெட் சாய்த்தார் வில்லே | ஜூலை 30, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து அசத்தல் வெற்றி * ஐந்து விக்கெட் சாய்த்தார் வில்லே | ஜூலை 30, 2020

சவுத்தாம்ப்டன்: அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்ற அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தியாவில் நடக்கவுள்ள 2023 உலக கோப்பை தொடருக்கான, சூப்பர் லீக் தகுதிச் சுற்றாக இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தவிர கொரோனா பரவலுக்குப் பின் நடந்த முதல் ஒருநாள் போட்டி இது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பீல்டிங் தேர்வு செய்தார்.

வில்லே ‘ஐந்து

அயர்லாந்து அணிக்கு இங்கிலாந்தின் வில்லே, ‘வில்லனாக’ மாறினார். ஸ்டெர்லிங் (2), டிலானி (22), கேப்டன் பால்பிர்ன் (3) என மூவரும் இவரிடம் ‘சரண்’ அடைந்தனர். கெவின் ஓ பிரையன் (22) ஏமாற்ற, மெக் பிரைன் (4) சற்று உதவினார். அயர்லாந்து அணி 44.4 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேம்பெர் (59 ) அவுட்டாகாமல் இருந்தார். வில்லே 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 27.5 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பில்லிங்ஸ் (67), மார்கன் (36) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை