முதல் காலாண்டில் ரிலையன்ஸ் கொரோனாவையும் மீறி லாபம்

தினமலர்  தினமலர்
முதல் காலாண்டில் ரிலையன்ஸ் கொரோனாவையும் மீறி லாபம்

மும்பை:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 13 ஆயிரத்து, 248 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 6,348 கோடி ரூபாயாக இருந்தது. மேலும், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிகர லாபம், 10 ஆயிரத்து, 104 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்கு விற்பனை மூலமாக, 4,966 கோடி ரூபாய் லாபத்தை பெற்றிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்புகள் அதிகமிருந்த காலகட்டத்திலும், நிறுவனத்தின் கீழ் உள்ள வணிகங்களின் ஒருங்கிணைந்த செயல் திறன், லாபத்தை அடைய உதவிகரமாக இருந்துஉள்ளது.

முதல் காலாண்டு சவாலானதாக இருக்கும் என்ற சந்தை நிபுணர்களின் கணிப்புகளையும் மீறி, ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல், எண்ணெய் முதல், ரசாயனம் வரையிலான வணிகங்கள் கைகொடுத்துள்ளன.மேலும், முதல் காலாண்டில், நிறுவனம் அதன் மொத்த செலவினத்தையும், 42 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளது.

மூலக்கதை