அப்பா ஆனார் ஹர்திக் பாண்ட்யா: கோஹ்லி, சகால் வாழ்த்து | ஜூலை 30, 2020

தினமலர்  தினமலர்
அப்பா ஆனார் ஹர்திக் பாண்ட்யா: கோஹ்லி, சகால் வாழ்த்து | ஜூலை 30, 2020

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார். இவருக்கு, கேப்டன் கோஹ்லி, சகால் உள்ளிட்ட சகவீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய அணி ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 26. இவருக்கும், செர்பிய மாடல் அழகி, நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் இடையே கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பாண்ட்யா–நடாஷா ஜோடி, மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

 

சமீபத்தில், ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் ஹர்திக் பாண்ட்யா, நடாஷாவுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு விரைவில் அப்பா ஆகப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று, பாண்ட்யா–நடாஷா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தனது குழந்தையின் கையை பிடித்திருப்பது போன்ற போட்டோவை வெளியிட்ட பாண்ட்யா, ‘எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது,’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்,’’ என தெரிவித்திருந்தார்.

 

இதேபோல, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், யுவேந்திர சகால், சூர்ய குமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை