பாக்., அணியில் முகமது ஆமிர் | ஜூலை 30, 2020

தினமலர்  தினமலர்
பாக்., அணியில் முகமது ஆமிர் | ஜூலை 30, 2020

டெர்பி: கொரோனா பரிசோதனையில் தேறிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் பாகிஸ்தான் அணியில் இணைந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 5ல் மான்செஸ்டரில் துவங்குகிறது. இதற்காக ஏற்கனவே இங்கிலாந்துக்கு வந்த பாகிஸ்தான் அணியினர், ஐ.சி.சி., வழிகாட்டுதலின் படி தனிமைப்படுத்திக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர், கடந்த ஜூலை 24ல் இங்கிலாந்துக்கு வந்தார். ஐ.சி.சி., வழிகாட்டுதலின்படி தனிமைப்படுத்திக் கொண்ட இவருக்கு, 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்ததால் சகவீரர்களுடன் இணைந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், மற்றொரு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராப், இங்கிலாந்துக்கு செல்லவில்லை. தற்போது 2 முறை இவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளதால், விரைவில் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளார்.

மூலக்கதை