விமானப்படைக்கு சச்சின் வாழ்த்து | ஜூலை 30, 2020

தினமலர்  தினமலர்
விமானப்படைக்கு சச்சின் வாழ்த்து | ஜூலை 30, 2020

புதுடில்லி: இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானம் இணைந்ததற்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரான்சின் ‘டசால்ட்’ நிறுவனத்திடம் இருந்து ரூ. 36,000 கோடிக்கு 36 அதி நவீன ரபேல் போர் விமானங்கள் இந்தியா வாங்குகிறது. மணிக்கு 2,222 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. முதற்கட்டமாக 5 விமானங்கள் பிரான்சில் இருந்து 7,000 கி.மீ. பயணம் செய்து ஹரியானா, அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு வந்து சேர்ந்தன.

இதையடுத்து இந்திய ராணுவத்தின் பலம் அதிகரித்துள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘அதி நவீன போர் விமானம் ரபேலை, எங்கள் ராணுவத்தில் சேர்த்த, இந்திய விமானப்படைக்கு வாழ்த்துக்கள். வான் பகுதியில் நமது தேசத்தை ஓய்வில்லாமல் அயராது பாதுகாக்கும் நமது பாதுகாப்பு படைகளுக்கு இது மிகப்பெரிய கூடுதல் பலம்,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை