யுஎஸ் ஓபனில் விளையாட மாட்டேன்... ஆஷ்லி பார்தி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
யுஎஸ் ஓபனில் விளையாட மாட்டேன்... ஆஷ்லி பார்தி அறிவிப்பு

சிட்னி: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று உலகின் முன்னணி வீராங்கனை ஆஷ்லி பார்தி தெரிவித்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  தள்ளி வைக்கப்பட்ட யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆக.31ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க முன்னணி வீரர்கள் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில், முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்தி (ஆஸி.), ‘கோவிட்-19 அபாயம் இன்னும் தொடர்கிறது. இந்த நேரத்தில் கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. யுஎஸ் ஓபன் போட்டியில் நானோஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகள் யாரும் பங்கேற்க மாட்டோம். அதே சமயம் அடுத்த ஆண்டு யுஎஸ் ஓபனில் யுஎஸ் ஓபனில் கட்டாயம் பங்கேற்பேன். தள்ளி வைக்கப்பட்டுள்ள பிரெஞ்ச் ஓபன், டபிள்யூடிஏ போட்டிகளில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை