6 குழந்தைகளை விற்பனை செய்த 4 டாக்டர்கள் அதிரடி கைது: ஆந்திராவில் நடந்த அட்டூழியம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
6 குழந்தைகளை விற்பனை செய்த 4 டாக்டர்கள் அதிரடி கைது: ஆந்திராவில் நடந்த அட்டூழியம்

திருமலை: மருத்துவமனைக்கு வரும் மலைவாழ் மக்களிடம் பண ஆசை காண்பித்து 6 குழந்தைகளை கடத்தி விற்ற 4 டாக்டர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் ஜில்லா பரிஷத் சந்திப்பில் தனியார் மருத்துவமனையை நடத்தி வருபவர் டாக்டர் நர்மதா.

இந்த மருத்துவமனைக்கு வரும் மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களிடம் பண ஆசை காண்பித்து குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, விசாகப்பட்டினம் கமிஷனர் ஆர். கே. மீனா தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த மருத்துவமனைக்கு வரும் மலைவாழ் மக்களிடம் நிறைய பணம் தருவதாக கூறி குழந்தைகளை கடத்தி விற்றது தெரிய வந்தது.

இதில் டாக்டர்கள் நர்மதா, திருமலை, வெங்கடலட்சுமி, அன்னபூர்ணா மற்றும் 2 ஊழியர்கள் என 6 பேர் ஈடுபட்டிருப்பதும், இதுவரை 6 குழந்தைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவர்கள் 6பேரையும் நேற்று கைது செய்தனர்.

இவர்களுக்கும் குழந்தைகளை திருடி விற்கும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?, 6 குழந்தைகளும் வளர்ப்பதற்காக விற்கப்பட்டதா?, மனித உறுப்புகளை வைத்து வியாபாரம் செய்யும் கும்பலுக்கு விற்கப்பட்டதா? அல்லது குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பலுக்கு விற்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை