தங்க கடத்தல் ராணி சொப்னாவுடன் தொடர்பு சிவசங்கர் ஐஏஎஸ்ஸிடம் என்ஐஏ கிடுக்கிப்பிடி: விசாரணை முடிவில் கைதாக வாய்ப்பு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்க கடத்தல் ராணி சொப்னாவுடன் தொடர்பு சிவசங்கர் ஐஏஎஸ்ஸிடம் என்ஐஏ கிடுக்கிப்பிடி: விசாரணை முடிவில் கைதாக வாய்ப்பு?

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று கொச்சியில் என்ஐஏ அதிகாரிகள் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சொப்னா கும்பலுடன், மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுங்க இலாகாவினர் 9 மணிநேரமும், என்ஐஏ 5 மணிநேரமும் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து முதல்வரின் முதன்மை செயலாளர், ஐடி செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து சிவசங்கர் நீக்கப்பட்டதோடு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கொச்சியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுவதற்காக சிவசங்கர் தயாரானார். அதன்படி இன்று அதிகாலை சுமார் 4. 30 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் காரில் புறப்பட்டு சென்றார்.

சுமார் 9. 15 மணிக்கு அவர் ெகாச்சி என்ஐஏ அலுவலகத்துக்கு வந்தார்.   தொடர்ந்து காலை 10 மணியளவில் அவரிடம் விசாரணை தொடங்கியது. என்ஐஏ தென்மண்டல டிஐஜி வந்தனா தலைமையில் என்ஐஏ, சுங்க இலாகா அதிகாரிகள் சிவசங்கரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொப்னா உள்பட அனைவரிடமும் இருந்து கிடைத்த தகவல்களை ைவத்து ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய பட்டியலை என்ஐஏ தயாரித்து வைத்திருந்தது. அதன் அடிப்படையில் நடைபெறும் விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த விசாரணை நேரடியாக டெல்லியில் உள்ள என்ஐஏ உயர் அதிகாரிகளுக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இடையிடையே டெல்லியில் இருந்தும் என்ஐஏ அதிகாரிகள் சிவசங்கரிடம் கேள்விகளை கேட்டனர். இந்த விசாரணையை கேரளா மட்டும் அல்லாமல் மத்திய அரசும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

விசாரணை முடிவில் சிவசங்கர் கைது செய்யப்பட்டாலோ அல்லது ெகாச்சியில் தங்கி இருக்குமாறு கூறினாலோ அது கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆகவே இன்ைறய விசாரணை கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜ உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சிவசங்கர் கைதாகினால் போராட்டம் மேலும் வலுவடையும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று கொச்சியில் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆனாலும் தனக்கு முன் ஜாமீன் ேதவையில்லை என்று சிவசங்கர் கூறியுள்ளார்.

சொப்னா 45 லட்சம் முதலீடு செய்த ஆவணம் சிக்கியது
கேரளாவை சேர்ந்த தங்கராணி சொப்னாவை பெங்களூருவில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தபோது அவர் ஒரு பேக்கை மறைத்து வைக்க முயற்சித்தார். பின்னர் அந்த பேக்கை கைப்பற்றி என்ஐஏ நீதிமன்றம் முன்னிலையில் திறந்து பரிசோதிக்கப்பட்டது.

இதில், தங்கம் கடத்தல் தொடர்பாக யார்? யாருடன் அவர் தொடர்பு வைத்திருந்தார், பணம் வாங்கினார், தங்கம் கொடுக்கப்பட்டது, வங்கிகளில் முதலீடு செய்த பணம் உள்ளிட்ட விவரங்கள் இருந்தன.

பின்னர் என்ஐஏ நடத்திய விசாரணையில், பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்த விவரங்கள் கிடைத்தன. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் வங்கி லாக்கரை திறந்து நடத்திய பரிசோதனையில், ஒரு கிலோவுக்கு மேல் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஒரு சில வங்கிகளில் உள்ள லாக்கர்களில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவரது வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் மேலும் சில வங்கிகளில் கணக்கும், லாக்கர்களும் இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வங்கி லாக்கரை திறந்து பரிசோதித்தபோது, அதில் ரூ. 45 லட்சம் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பல வங்கிகளில் அவருக்கு கோடி கணக்கில் நிரந்தர வைப்பு தொகை முதலீடு செய்துள்ள ஆணவங்களும் சிக்கின.

மீண்டும் விசாரிக்க முடிவு
திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக துணை தூதரின் பாதுகாவலராக இருந்த ஜெயகோஷுக்கும் தங்க கடத்தலில் தொடர்பு உள்ளதை என்ஐஏவும், சுங்க இலாகாவும் கண்டுபிடித்துள்ளது.

ஆயுதப்படை காவலராக இருந்த இவர் துணை தூதரின் பாதுகாவலராக நியமிக்கப்படுவதற்கு முன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் பணிபுரிந்து வந்தார். அப்போது இவருக்கு பல அதிகாரிகளுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி இவர் சொப்னா கும்பலுக்கு உதவி இருக்கலாம் என என்ஐஏ மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஏற்கனவே இவரிடம் சுங்க இலாகவினரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அவரது பதில்கள் எதுவும் திருப்தியளிக்கவில்லை.

இதையடுத்து ஜெயகோஷிடம் மீண்டும் விசாரிக்க சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. இந்த விசாரணை முடிவில் ஜெயகோஷ் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சொப்னா அளித்த பட்ட சான்றிதழ் உண்மையானதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு பாபாசாகிப் அம்பேத்கார் பல்கலைக்கழகத்துக்கு கன்டோன்மென்ட் போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். சான்றிதழ் உண்மையல்ல என்ற தகவல் வந்தால் இந்த வழக்கிலும் சொப்னாவை கைது செய்ய கன்டோன்மென்ட் ேபாலீசார் தீர்மானித்துள்ளனர்.

ரமீஸ் மீது வழக்கு
தங்கம் கடத்தல் வழக்கில் கைதான மலப்புரத்தை சேர்ந்த ரமீஸ் கடந்த ஆண்டு துபாயில் இருந்து 6 துப்பாக்கிகளை கடத்தி உள்ளார்.

கொச்சி விமான நிலையத்தில் சுங்க இலாகா நடத்திய சோதனையில் அவர் பிடிபட்டார். பின்னர் இந்த துப்பாக்கிகளை சுங்க இலாகாவினர் கொச்சி நெடும்பாசேரி போலீசில் ஒப்படைத்தனர்.

அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் துப்பாக்கி கடத்தல் வழக்கை மீண்டும் விசாரிக்க என்ஐஏ தீர்மானித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வாளையார் அருகே கஞ்சிக்கோடு மலம்புழா வனப்பகுதியில் ரமீஸ் தலைமை யிலான  கும்பல் 3 மான்களை வேட்டையாடினர். இந்த வழக்கிலும் போலீசாரோ, வனத்துறையினரோ விசாரணை நடத்தவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வனத்துறை தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக வாளையார் வனத்துறை அதிகாரிகள் ரமீஸை கைது ெசய்ய என்ஐஏயின் அனுமதியை கோரியுள்ளனர்.

.

மூலக்கதை