கொரோனா மரணங்கள் மறைப்பை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் : காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா மரணங்கள் மறைப்பை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் : காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு

சென்னை: சென்னையில் 444 கொரோனா மரணங்கள் மறைப்பு குறித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று காலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் நிர்வாக தோல்விகள் மற்றும் மோசடிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது சற்றும் குறையாமல் ஒவ்வொரு நாளும் உச்சத்தை தொட்டு வருகிறது.

தற்போது சென்னையில் குறைந்தாலும் பிற மாவட்டங்களில் கட்டுக் கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. மிகவும் கட்டுக்குள் வைத்திருந்த மாவட்டங்களில் கூட தற்போது நோய் தொற்றின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.



இதற்காக அரசு எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகள் கை கொடுக்காமல் போவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்தும் விவாதிப்பதற்காக தமிழக அரசு  அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் இது மருத்துவம் தொடர்பான விவகாரம் என்பதால், அனைத்து கட்சியினர் கூடி உரிய முடிவு எடுக்க முடியாது.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி தான் செயல்பட முடியும் என்றும், அதனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவசியமில்லை எனவும் முதல்வர் பதில் அளித்தார்.

இந்நிலையில், சென்னையில் 444 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதாக தினகரனில் செய்தி வெளியானது.

இதை அதிகாரிகள் மறுத்து வந்தனர். ஆனால் தற்போது அந்த மரணங்கள் மறைக்கப்பட்டது உண்மைதான் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனால், மாவட்டங்களிலும் கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையும் வெளியிட வேண்டும் என்று மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனால் கொரோனா மரணங்கள் மறைப்பு மற்றும் அரசின் நிர்வாக தோல்விகள் குறித்து இன்று காலை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.

 
 
இக்கூட்டத்தில், தமிழக அரசின் ெகாரோனா பேரிடர் கால மோசடிகள், மரணங்கள் மறைப்பு குறித்தும், நிர்வாக தோல்விகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகைதீன், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.   திமுகவை சேர்ந்த பொருளாளர் துரைமுருகன், டி. ஆர். பாலு ஆர். எஸ். பாரதி, காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.



மதிமுக சார்பில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்  மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசின் தோல்விகள் குறித்து கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அனைத்துக் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்துவது, தமிழக ஆளுநரை சந்தித்து முறையிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் திமுக நடத்திய 3வது அனைத்துக் கட்சி கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை