இந்தியாவுக்கு எதிராக சீனாவின் அடுத்த நடவடிக்கை; பாகிஸ்தானில் உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவனம்: 3 ஆண்டு ஒப்பந்தம் குறித்து சர்வதேச உளவு அமைப்பு தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவுக்கு எதிராக சீனாவின் அடுத்த நடவடிக்கை; பாகிஸ்தானில் உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவனம்: 3 ஆண்டு ஒப்பந்தம் குறித்து சர்வதேச உளவு அமைப்பு தகவல்

புதுடெல்லி: இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக, ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுப்படுத்த சீனாவும் பாகிஸ்தானும் ரகசிய ஒப்பந்தங்கள் செய்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ‘தி கிளாக்சன்’ என்ற உளவுத்துறை செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளன.

ஆபத்தான ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல ஆராய்ச்சி திட்டங்கள், இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

கொரோனா வைரஸ் உருவாகியதாக கூறப்படும் வூஹான் வைரஸ் ஆராய்ச்சி மையம் மற்றும் டெஸ்டூ எனப்படும் பாகிஸ்தானின் ராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

பாகிஸ்தானுக்கு உதிரிபாகங்களை வழங்கியதுடன், வைரஸ் சேகரிப்பு தரவுத்தளத்தை உருவாக்க விஞ்ஞானிகளுக்கு நோய்க்கிருமிகள் மற்றும் உயிர் தகவல்தொடர்புகளை கையாள பயிற்சியையும் அளித்துள்ளது.
உயிரியல் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் எனப்படும் பாக்டீரியத்தை பிரிக்க வெற்றிகரமான மண் மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாகிஸ்தானின் மண்ணில் நடத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை செயல்பட வைப்பதே சீனாவின் முக்கிய நோக்கம். ஆபத்தான உயிர் வேதியியல் ஆராய்ச்சிக்கான ஒரு இடமாக பாகிஸ்தானை சீனா தேர்வு செய்துள்ளது.



அதேசமயம் இதுபோன்ற செயல்களுக்கு தனது சொந்த நிலப்பகுதியைப் பயன்படுத்துவதைத் சீனா தவிர்த்துள்ளது. இதனால் ஏற்படும் சர்வதேச விமர்சனங்களையும் அபாயத்தையும் எதிர்கொள்வதை தவிர்க்கவே, சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 
சீனா-பாகிஸ்தான் இடைேய ஏற்கனவே கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் வைரஸ் (சி. சி. எச். எஃப். வி) சோதனைகளை மேற்கொண்டன. இது 25 சதவீதம் அளவிற்கு மரணத்தை ஏற்படுத்தும் எபோலா வைரசை போன்றது.

உயிரியல் போரின் (பயோ வார்) அச்சுறுத்தல் சர்வதேச அளவில் அதிகரித்துள்ள நிைலயில், சீனா உயிரியல் ஆயுதத்தை பயன்படுத்த தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக சீனாவில் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தையும், தெற்கு யுன்னான் மாகாணத்தில் குன்மிங்கில் மருத்துவ உயிரியல் நிறுவனத்தையும் நிறுவியுள்ளது’ என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை