ராஜஸ்தான் அரசியலில் 3வது நாளாக ெதாடரும் பரபரப்பு; நீக்கப்பட்ட துணை முதல்வர், 2 அமைச்சர்கள் தகுதி நீக்கம்?...சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜஸ்தான் அரசியலில் 3வது நாளாக ெதாடரும் பரபரப்பு; நீக்கப்பட்ட துணை முதல்வர், 2 அமைச்சர்கள் தகுதி நீக்கம்?...சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசியலில் 3வது நாளாக ெதாடரும் பரபரப்புக்கு மத்தியில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துணை முதல்வர், 2 அமைச்சர்களை தகுதிநீக்கம் செய்ய முதல்வர் கெலாட் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நடைபெற்று வந்த பனிப்போர், வெளிப்படையாக வெடித்துள்ளது. அதிகார பகிர்வு விவகாரத்தில் சச்சின் தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டார்.

சச்சினுக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அசோக் கெலாட் பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் அவரது தரப்பு தெரிவித்தது.   இதனிடையே சச்சினை சமாதானப்படுத்தும் முயற்சியில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் அசோக் கெலாட் தலைமையில் 2 நாட்களாக நடைபெற்றது.

கூட்டத்தில் 102 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக அசோக் கெலாட் தரப்பு கூறியுள்ளது. கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்காத நிலையில், அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செய்தி ெதாடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்தார்.  
மேலும், சச்சின் ஆதரவாளர்களான விஷ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.

அப்போது சச்சின் பைலட், விஷ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்க அசோக் கெலாட் பரிந்துரைத்தார்.   இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் பைலட் நீக்கப்பட்டதை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அவரது பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. மேலும், சச்சின் பைலட் தனது டுவிட்டர் பக்கத்தில் துணை முதல்வர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் எனக் குறிப்பிட்டிருந்ததை நீக்கினார்.

‘உண்மையை மறைக்க முடியுமே தவிர, தோற்கடிக்க முடியாது’ என்றும் கருத்து பதிவிட்டுள்ளார். கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சச்சின் நீக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய தலைவராக கோவிந்த் சிங் தோதஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அரியானாவில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சொகுசு விடுதியில் சச்சின் பைலட் தங்கியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன், ‘பாஜகவில் சேரமாட்டேன்’ என்று சச்சின் பைலட் இன்று கூறினார்.

இருந்தாலும், மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு எதிராக செயல்பட உள்ளார்.

இது, கெலாட் அரசு ஆட்சியில் நீடிக்குமா? நீடிக்காதா? என்பது விரைவில் தெரியவரும்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக நடந்த கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உட்பட 18 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், அவர்கள் 2 நாளில் தாங்கள் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும்  ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே இன்று தெரிவித்தார். முதல்வர் கெலாட் தனது இல்லத்தில், புதியதாக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகாக்களை ஒதுக்குவது குறித்து மூத்த தலைவர்களுடன் விவாதித்தார்.

மேலும், சச்சின் பைலட், 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டதால், அவர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்தும் சபாநாயகரிடம் ஆளுங்கட்சி தரப்பு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே ராஜஸ்தான் மாநில முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் இன்று அவசர கூட்டம் நடைபெறுகிறது.

அப்போது, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட், இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது எதிர்கால முடிவை அறிவிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

.

மூலக்கதை