திரிபுரா கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் தயாராகும் மூங்கில் பாட்டில்கள்!: வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்பு!!!

தினகரன்  தினகரன்
திரிபுரா கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் தயாராகும் மூங்கில் பாட்டில்கள்!: வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்பு!!!

திரிபுரா: சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் மாசு ஏற்படுத்தாத வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் மூங்கில் பாட்டில்கள் சர்வதேச அளவில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளன. வீடெங்கும் வியாபித்திருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக தற்போது சந்தைகளில் மூங்கில் பாட்டில்கள் பிரபலமாகி வருகின்றன. திரிபுரா மாநிலத்தில் முற்றிலும் இயற்கை முறையில் கைவினை கலைஞர்களால் பல்வேறு வகையான மூங்கில் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. தாமிர பாட்டிலின் மேல் எந்தவித ரசாயன பயன்பாடும் இல்லாமல் மூங்கில்களை இழைத்து கைவினை கலைஞர்கள் பொறுத்துகின்றனர். பார்ப்பதற்கு அழகாகவும்,  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த திரிபுரா மூங்கில் குடுவைகள் கடல் கடந்தும் பிரபலம் அடைந்து வருகின்றன. இதுகுறித்து கலைப்பொருள் கழகத்தினர் தெரிவித்ததாவது, இந்தியாவில் மட்டும் அல்ல பல்வேறு நாடுகளில் மூங்கில் பாட்டில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மூங்கில் பாட்டில்கள் குறித்து 4 ஆயிரம் பேர் தொலைபேசியில் அழைத்து விவரங்களை கேட்டுள்ளனர் என தெரிவித்தனர்.மூங்கிலால் செய்யப்பட்டிருந்தாலும், 100 சதவீதம் தண்ணீர் வெளியே கசியாத அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மூங்கில் இயல்பாகவே கிருமிகளை வளரவிடாது என்பதால் இவற்றை பராமரிப்பதும் எளிது என திரிபுரா கைவினை கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். பாட்டிலை தயாரிக்க வடுகா என்ற மூங்கில் வகை பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 100 முதல் 150 மூங்கில்களை பயன்படுத்தி 1500 பாட்டில்கள் வரை உருவாக்கப்படுகிறது.

மூலக்கதை