கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பயோ தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.

நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளில், கொரோனா தடுப்பு மருந்து, சோர்வு, குளிர், தலைவலி போன்ற லேசான பக்கவிளைவுகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு வேலை செய்துள்ளது. தேசிய சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மாடர்னா, மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்ட அமெரிக்காவின் முதல் தடுப்பு மருந்து என்ற பெயரை பெற்றுள்ளது.

முதல்கட்ட சோதனையில் 18 முதல் 55 வயது வரையிலான 45 நபர்களுக்கு, 28 நாட்கள் இடைவெளியில் எம்.ஆர்.என்.ஏ-1237 தடுப்பூசி இரண்டு முறை செலுத்தப்பட்டது. 25, 100 மற்றும் 250 மைக்ரோ கிராம் என டோஸ் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டனர். மார்ச் 16 முதல் ஏப்.,14க்குள் இடையில் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சோதனை தொடர்பாக பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை என்றாலும் இரண்டு தடுப்பூசியை செலுத்திய பிறகு தன்னார்வலர்களுக்கு ஊசி போடும் இடத்தில் சில வலி போன்ற லேசான மற்றும் மிதமான பக்க விளைவுகள் இருந்தன. மேலும் தடுப்பூசியின் அளவு அதிகமாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

முதல் தடுப்பூசி மருந்தை செலுத்திய பிறகு, 25 மைக்ரோ கிராம் குழுவில் 5 பேருக்கும், 100 மைக்ரோ கிராம் குழுவில் 10 பேருக்கும், 250 மைக்ரோ கிராம் குழுவில் எட்டு பேருக்கும் பக்கவிளைவுகள் இருந்தன. இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு, 25 மைக்ரோகிராம் குழுவில் பங்கேற்ற 13 பேரில் ஏழு பேரிலும், 100 மைக்ரோகிராம் குழுவில் 15 பேரும், 250-மைக்ரோகிராம் குழுவில் உள்ள 14 பேருக்கும், அதில் மூன்று பங்கேற்பாளர்களில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு கடுமையான பக்கவிளைவுகளை எதிர்கொண்டனர்.

இரண்டாவது தடுப்பூசிக்கு பின்னர் 100 மைக்ரோகிராம் டோஸ், 80% மத்தியில் சோர்வு; குளிர் 80%; தலைவலி 60%; மற்றும் தசை வலி 53% இருந்ததாகவும், மற்ற லேசான பக்கவிளைவுகள் இருந்ததாகவும் மாடர்னா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரொனா தொற்றில் இருந்து இயற்கையாக குணமடைந்தவர்களின் உடலில் இருந்த நோய் எதிர்ப்பு சக்தி அளவுக்கு, அனைத்து பங்கேற்பாளர்களின் உடலிலும் தொற்று நோயை அழிக்கும் அளவுக்கு ஆண்டிபாடிகள் எண்ணிக்கை இருந்தது என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம், பொதுவான பக்கவிளைவுகள் இல்லையென்பதும், 45 பேருக்கும் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அடுத்தக்கட்ட ஆராய்ச்சி தேவைப்படுகிறது.


மூன்றாவது கட்ட பரிசோதனை :மாடர்னா செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்கால ஆய்வுகள் அனைத்தும் சரியாக செல்லும்பட்சத்தில், ஆண்டுக்கு சுமார் 500 மில்லியன் டோஸ்களும், 2021ல் துவங்கி ஆண்டுக்கு 1 பில்லியன் டோஸ் வரை வழங்க முடியும் என கூறியுள்ளது.

இதனிடையே மாடர்னா நிறுவனம், தனது எம்.ஆர்.என்.ஏ-1237 தடுப்பு மருந்தை, வரும் ஜூலை 27ம் தேதி மூன்றாவது கட்டமாக மிகப்பெரிய சோதனையை துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் சுமார் 87 இடங்களில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாவது கட்ட சோதனையை துவங்கும் முதல் நிறுவனமாக மாடர்னா இருக்கும். பின்னர் தடுப்பூசி குறித்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்களின் கருத்தின் அடிப்படையில் இறுதிக்கட்ட பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை