'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி பெறுவேன்': டிரம்ப் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி பெறுவேன்: டிரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: 'வரும் நவ., மாத இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன்; நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவேன்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 35.45 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.39 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.


'டிரம்ப் நிர்வாகம் கொரோனாவைச் சரியாகக் கையாளவில்லை. கறுப்பின மக்களுக்கு டிரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை' எனக் கூறி குடியரசுக் கட்சி அதிபர் ஜோ பீடன் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்து வருகிறார்.


இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப், ''நான் சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளேன். இதற்கு முன்னர் எவரும் செய்யாத சாதனைகளை எல்லாம் நான் செய்துள்ளேன். தேர்தல் நேரத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத முடிவுகளைப் பார்க்கப் போகிறோம். 2016ம் ஆண்டு நடந்ததுபோலவே மீண்டும் நான் வெற்றி பெறுவேன். அடுத்த வருடம் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக அமெரிக்காவை மாற்றுவேன்,'' எனத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை