கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!!

தினகரன்  தினகரன்
கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!!

சென்னை : கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்தது. மதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக வீடியோக்கள் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூகவலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரவுவதை தடுக்க அரசு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை