காமராஜரின் றந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!

தினகரன்  தினகரன்
காமராஜரின் றந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!

சென்னை : பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோரும் கலந்து கொண்டனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், \'கர்மவீரர்- வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிய சிறந்த முதல்வர்- பொதுவாழ்வில் அரிய மாமனிதர்- திராவிட இயக்கத் தலைவர்களின் அன்புக்குரிய காமராஜர் பிறந்தநாளினை கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பெருந்தலைவர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றிப் போற்றுவோம்!\' என்று கூறி புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

மூலக்கதை