கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு வேகம் பிடிக்கிறது.: முன்னாள் செயலாளர் சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரணை

தினகரன்  தினகரன்
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு வேகம் பிடிக்கிறது.: முன்னாள் செயலாளர் சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையை நடத்தி வரும் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று மலை 5.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை சிவசங்கரிடம் விசாரணை நடத்தினர். 30 கிலோ தங்கக் கடத்தலுக்கு முக்கிய புள்ளியாக திகழும் சொப்னா சுரேஷ்க்கு தனக்கும் 4 ஆண்டுகள் பழக்கம் இருந்ததாக சிவசங்கர் கூறியுள்ளார். விமானத்தில் சிக்கிய 30 கிலோ தங்கத்தை விடுவிக்க சிவசங்கர் ஐஏஎஸ் பல்வேறு வகைகளில் அழுத்தம் அளித்து முயன்று பார்த்ததும் உறுதியாகி உள்ளது. சொப்னா சுரேஷ்யிடம் தொலைபேசியில் பலமுறை பேசியுள்ளதாக கூறியுள்ள சிவசங்கர், முன்னாள் தூதரக அதிகாரி சரித் குமார் எனது நண்பர் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஜூலை 2-ம் தேதி தங்கிய 4 முக்கிய புள்ளிகள் குறித்தும் இந்த விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்துள்ள நிலையில் இன்னும் சிவசங்கர் ஐஏஎஸ் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் சொப்னா சுரேஷ்யுடன் கேரள கல்வித்துறை அமைச்சர் தொடர்பில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் முதலமைச்சர் பினராயி விஜயன் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

மூலக்கதை