இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு 60 சதவீதம் குறைவு :ஐநா.,

தினமலர்  தினமலர்
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு 60 சதவீதம் குறைவு :ஐநா.,

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு 60 சதவீதம் அளவிற்கு குறைந்து உள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது


ஐ.நா.,வின் உலக உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 60 மில்லியன் குறைந்துள்ளது.

இது 2004-06ம் ஆண்டு 21.7 சதவீதத்தில் இருந்து 2017-19ம் ஆண்டில் 14 சதவீதமாக குறைந்து உள்ளது. அதாவது 2004-06 ல் 249.4 மில்லியனில் இருந்து 2017-19 ல் 189.2 மில்லியன் ஆக குறைந்ந்து விட்டது.


உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டில் 690 மில்லியனாக உள்ளது. இது 2018 ம் ஆண்டை காட்டிலும் 10 மில்லியன் அதிகமாகும்.

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைகடைகளில் இருந்து வாங்க கூடிய விலையில் 800 மில்லியன் மக்களை அடைகிறது.இது பொது விநியோக முறையில் உலகின் மிகபெரிய சமூக பாது காப்பு திட்டத்தை குறிப்பதாக உள்ளது என ஐ.நா.,வின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை