கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 608 பேருக்கு கொரோனா: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி..!!

தினகரன்  தினகரன்
கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 608 பேருக்கு கொரோனா: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  கேரளா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 8,930 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 4454 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் 200-க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் மேலும் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில மக்களுக்கு கொரோனா பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாம் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய நேரம் இதுவல்ல. நாம் அதிகம் தியாகம் செய்துள்ளோம். கொரோனாவை ஒருமுறை கட்டுப்படுத்தி உள்ளோம். அதேபோல் ஒன்றிணைந்து அதை மீண்டும் செய்யப் போகிறோம். நம்மால் முடியும். எப்படி கட்டுப்படுத்துவது என்பதும் நமக்கு தெரியும். சமூக விலகலை பின்பற்றுங்கள்; முகக் கவசம் அணியுங்கள்; அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்றுஅவர் கூறி உள்ளார்.

மூலக்கதை