மீன் பிடிக்க வராதீங்க... தமிழக மீனவர்களுக்கு கேரளா தடை

தினகரன்  தினகரன்
மீன் பிடிக்க வராதீங்க... தமிழக மீனவர்களுக்கு கேரளா தடை

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டி: சமீபத்தில் குமரி மாவட்டத்திற்கு மீன் வாங்க சென்ற திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு மீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் மூலம் திருவனந்தபுரத்தில் ஏராளமானோருக்கு நோய் பரவியது. தற்ேபாது மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ளது. ஏராளமானோர் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மீன் பிடிக்க வருவார்கள். மீனவர்கள் பெரும்பாலும் ஒன்றாக சேர்ந்துதான் மீன் பிடிக்க செல்வார்கள். அப்போது, நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் இருந்து எந்த மீனவர்களும் கேரள எல்லைக்குள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை