மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ‘குவாரன்டைன்’

தினகரன்  தினகரன்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ‘குவாரன்டைன்’

புதுடெல்லி: காஷ்மீரின் பந்திபோராவில் சில தினங்களுக்கு முன் மூத்த  பாஜ தலைவர் வாசிம் பாரி, அவரது மகன் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடைய குடும்பத்தினரை சந்திக்க மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், பாஜ பொதுச்செயலாளர் ராம் மாதவ் காஷ்மீர் சென்றனர். ஜம்மு காஷ்மீர் மாநில பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா அவர்களை வாசிம் பாரி வீட்டிற்கு அழைத்து சென்றார். இந்நிலையில், ரவீந்தர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ஜிதேந்திர சிங், தன்னை சுயதனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில், ``ரவீந்திர ரெய்னாவுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்ததும், அவருடன் 48 மணி நேரம் உடன் இருந்ததால் என்னை சுய தனிமைப்படுத்தி கொண்டேன். இதற்கு முன்பு, கடந்த 2 வாரத்தில் 4 முறை பரிசோதனை முடிவுகள் `நெகடிவ்’ என்று வந்தது’ என்று கூறியுள்ளார். ராம் மாதவும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மூலக்கதை