பாதிப்பில் படுவேகம் 3 நாட்களில் 1 லட்சம் தொற்று

தினகரன்  தினகரன்
பாதிப்பில் படுவேகம் 3 நாட்களில் 1 லட்சம் தொற்று

புதுடெல்லி: நாட்டில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்தை கடந்தது. மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,06752 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் குறித்த விவரங்கள் குறித்த வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் மொத்தம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,06752ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 23,727 பேர் மரணமடைந்துள்ளனர். 24மணி நேரத்தில் புதிதாக 533 பேர் உயிரிழந்துள்ளனர்  குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,71459ஆக உள்ளது. 3,11,565 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 63.02சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக 26 ஆயிரத்தும் அதிகமாக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா பரவிய பிறகு முதல் 110 நாட்களில் தான் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது. ஆனால், அதற்கு அடுத்த 56 நாட்களில் இந்த எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது. கடந்த 3 நாட்களில் மட்டுமே ஒரு லட்சம் பேர் பாதித்துள்ளனர். உயிரிழந்த 553 பேரில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் 193 பேர். கர்நாடகா 66, டெல்லி 40, ஆந்திரா 37, மேற்கு வங்கம் 24, உத்தரப்பிரதேசம் 21, பீகார் 17, ராஜஸ்தான் 15, குஜராத், மத்தியப்பிரதேசம் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா 9, ஜம்மு மற்றும் காஷ்மீர் 8, அரியானா 7, ஒடிசா 6, பஞ்சாப் 5, ஜார்கண்ட் மற்றும் கோவா தலா 3, கேரளா மற்றும் உத்தரகாண்ட் தலா 2, அசாம், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி , டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* 10 மாநிலத்தில் 86% பாதிப்புகொரோனா மொத்த பாதிப்பில் 86 சதவீத பங்கை 10 மாநிலங்களில் கொண்டுள்ளன. சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 சதவீதம் பேர் (1 லட்சத்து 54 ஆயிரத்து 134) மகாராஷ்டிரா, தமிழகத்தை சேர்ந்தவர்கள். கர்நாடகா, டெல்லி, ஆந்திரா, உபி, தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், அசாம் மாநிலங்கள் 36 சதவீதத்தையும் (1 லட்சத்து 11 ஆயிரத்து 68) கொண்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை