பேரழிவு ஏற்படும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
பேரழிவு ஏற்படும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ரஸ் அதனன் ஜெப்ரியேசிஸ் நேற்று அளித்த பேட்டி வருமாறு:கொரோனா வைரஸ் பற்றி பல்வேறு நாட்டு தலைவர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த வைரசை கட்டுப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ள மக்களுக்கு இதனால் கவலை ஏற்படுகிறது. தங்கள் நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய தலைவர்கள்தான், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றன. அதேநேரம், தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக, கலாச்சார பாதிப்புகளை சமாளித்து, வைரசை கட்டுப்படுத்துவது என்பது, ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் பெரிய சவாலான பணியாகதான் இருக்கும் என்பதையும் எங்களால் உணர முடிகிறது. இந்த வைரஸ் மக்களின் நம்பர்-1 எதிரியாக உள்ளது. ஆனால், பல்வேறு நாடுகளின் நடவடிக்கையும், மக்களின் செயல்பாடும் இதை பிரதிபலிப்பதாக இல்லை. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உள்ள சில நாடுகள், பள்ளி, கல்லூரிகளை திறந்துள்ளன. ஆனால், சில நாடுகள் வைரசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், கல்வி நிலையங்களை திறப்பதாக ‘அரசியல் விளையாட்டு’ விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதனால், பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

மூலக்கதை