கொரோனா தந்த எதிர்காலம்: காசு... பணம்... துட்டு... மணி... மணி...

தினகரன்  தினகரன்
கொரோனா தந்த எதிர்காலம்: காசு... பணம்... துட்டு... மணி... மணி...

நான்கு மாதங்கள் வீட்டுக்குள் முடக்கி விட்டது கொரோனா; பல லட்சம் பேருக்கு வேலை பறிபோனது; சில லட்சம் பேருக்கு இதோ...அதோ என்று வேலை; சம்பளமோ பாதி. கொரோனா காலத்தில் கையில் இருந்த பணம் கரைந்தது; பிஎப் பணமும் காணாமல் போய் விட்டது; பலரும் இப்போது வேலையை தக்க வைக்க போராட்டம்; சம்பளமும் வர வேண்டும். சேமிப்பையும் செய்ய வேண்டிய பெரும் சவால் சாமான்ய மக்களை நெருங்கி விட்டது. சாதாரண பெட்டிக்கடைகள் முதல் சாப்ட்வேர் நிறுவனங்கள் வரை திக்குமுக்காடி வருகின்றன. இந்த நிறுவனங்கள்,கடைகள் திண்டாடும் போது, நீங்கள் பணியாற்றும் நிறுவனம் எந்த அளவுக்கு உங்கள் வேலை திறமையை, உழைப்பை எதிர்பார்க்கும். இதற்கு நீங்கள் தயாராக வேண்டிய காலம் வந்து விட்டது. பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் நிலை பற்றி கவலைப்படவில்லை. ஆனால், சில நிறுவனங்கள், தங்களை நம்பி வாழ்க்கை நடத்தும் ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டி வருகின்றனர். அந்த நம்பிக்கையை ஒவ்வொருவரும் ஏற்று, நிறுவனத்தை மீண்டும் தலைநிமிர வைக்க வேண்டிய பொறுப்பு, சவால் உள்ளது.ஒருபக்கம் தங்கள் வேலை உழைப்பை காட்டி சம்பளத்தை நிலைக்க வைப்பதுடன், இன்னொரு சவால், குடும்பத்திற்கு நம்பிக்கையூட்டுவது. இதற்காக நீங்கள் சில தியாகங்களை செய்து தான் ஆக வேண்டும். இதோ உங்களுக்காக, உங்கள் குடும்பத்துக்காக செய்ய வேண்டிய சேமிப்புகள். சேமிப்பு தான் வாழ்க்கை சம்பளத்தில் சேமியுங்கள்; முடிந்த வரை சேமியுங்கள். சவாலை சந்திக்கலாம்; முறியடிக்கலாம்; அடுத்த சில ஆண்டிலேயே. இனி உங்கள் பட்ஜெட்அன்றாட அத்தியாவசிய தேவைகள் - மளிகை, காய்கறி, பால்; வாடகை; பள்ளி, கல்லூரிக்கு கட்டணம், மருத்துவ செலவு. இதை தவிர, விடுமுறை நாட்களில் வெளியே போய் செய்யும் செலவுகள் தான் இனி சேமிப்பு. ஏன் சேமிக்கணும்?* சொந்த வீடு வாங்க...* பிள்ளைகள் மேற்படிப்புக்கு...* மருத்துவ செலவுகளுக்கு...* ஒய்வு வயதில் செலவிட...டெபாசிட் திட்டங்கள்.* எதிர்காலத்துக்கு முக்கியமானது காப்பீடு. 21 வயது வந்து விட்டால் பிள்ளைகள் மேற்கல்விக்கு சுலபமாக செலவிட முடியும். * மாதாமாதம் சொற்ப பணத்தை ரெக்கரிங் டெபாசிட்டில் போட திட்டமிடுங்கள்.சிறியதாக துவங்குங்க* மாதந்தோறும் முக்கிய செலவுகள் போக மீதம் பணத்தை டெபாசிட் கட்டி வரும் போது, 12 மாதத்தில் உங்களுக்கு அந்த பணம் பெரும் நம்பிக்கையூட்டும். தொடர்ந்து நீங்களே திட்டமிடுவீர்கள்; அதிகம் சேமிப்பீர்கள். இரண்டாவது சம்பளமா?* சிலர் கொரோனா காலத்துக்கு முன், பகுதி நேரமாக கூடுதலாக சில இடங்களில் வேலை பார்த்திருப்பர். பிரதான அலுவலகத்தில் வாங்கும் சம்பளம் போதாது என்பதால் பகுதி நேர வேலைக்கு போய் அங்கும் சுமாரான சம்பளம் பெற்று வந்திருப்பர். இனி அப்படி ஒரு நிலை வருமா? கஷ்டம் தான். பகுதி நேர வேலை தரும் பல சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மூடிக்கொண்டிருக்கின்றன. அதனால், கையில் வரும் சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதற்கு கற்றுக் கொள்வது நல்லது.கடனை துரத்துங்கள்* ஏற்கனவே பொருட்களுக்கு கடன் வாங்கியிருந்து மாத தவணை கட்டுவீர்கள்; அது தவிர, புதிய கடன்களை வாங்காதீர்கள். அது உங்களை வதைத்து விடும். * கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என்று இருந்தால் பயத்துடன் செலவு செய்யுங்க. கிரெடிட் கார்டு மாத பில் வந்ததும் முழு பணத்தையும் கட்டிவிடுங்கள்; இல்லையேல், வட்டிக்கு வட்டி குட்டி போட்டு ராட்சதனாக வளர்ந்து விடும். அதனால் கடன் பக்கம் தலைவைத்துக்கூட படுக்காதீர்கள்.சிறுசேமிப்பு கைகொடுக்கும்* பெரிதாக எண்ணி, அதிக முதலீடு செய்வதை விட, பெரிய நோக்கத்தை மனதில் வைத்து சிறிய அளவில் சேமிக்க ஆரம்பியுங்கள். வங்கி கணக்கில் சேமிப்பு கணக்கில் மாத கடைசியில் ஏதாவது மீதம் இருக்குமானால், அதை அப்படியே தனியாக சேமிக்க துவங்குங்கள். பணம் ஓரளவு சேர்ந்ததும், டெபாசிட் செய்யலாம்; தேசிய சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ரிஸ்க் எடுக்காதீர்கள்* பங்கு சந்தையில் பலரும் ஈடுபட்டு வருவது சமீப காலமாக பரவலாகி விட்டது. ஆனால், கொரோனாவுக்கு பின் பங்குச்சந்தையில் கம்பெனிகளின் நிலை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. இன்னும் குறைந்தபட்சம் கம்பெனிகளின் பங்குகள் விலை கணிசமாக உயர ஓராண்டாவது பிடிக்கும் என்பது தான் நிபுணர்கள் கணிப்பு. * அதுவரை, பங்குச்சந்தையில் லாபம் வரும் என்று தவறாக கணித்து பணத்தை முடக்காதீர்கள். ஏற்கனவே பங்குகளை வாங்கிய கம்பெனிகள் நிலையை தொடர்ந்து கண்காணித்து பங்குகளை விற்பதா, தக்க வைக்கலாமா என்பதை மட்டும் பாருங்கள். பணம் கடனாக வாங்கினால்...* கையை கடிக்கிறது மாத தவணைகள் என்று நினைத்து யாரிடமாவது கடன் வாங்கினால்,வட்டியே உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கு இழுத்து வந்து விடும். வேண்டாம் தனி நபரிடம் இருந்து வாங்கும் கடன்.* புதிதாக வீடு வாங்குவதும் இப்போது உங்களுக்கு பெரும் சுமையாக அமைந்து விடும். இப்போதுள்ள நிலையில், தள்ளாடிக்கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் நல்ல விலை வரும் போது சில ஆண்டுகள் கழித்து யோசியுங்கள். எதில் செலவை குறைக்கலாம்?* பழைய மொபைலை பார்த்தால் கடுப்பாகி விட்டதா? பொறுத்து கொள்ளுங்கள். புதிதாக ஸ்மார்ட் மொபைல் வாங்கினால் கையை கடிக்கும். தேவையா? தள்ளிப்போடுங்க.* மொபைல் போலத்தான், இப்போது இருக்கிற டிவியே போதும்; புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க முயற்சிக்காதீங்க; எந்த லாபமும் இல்லாத முதலீடுகள் இவை. * பைக் முக்கியமாக இருக்கலாம். ஆனால், கார் வாங்க கனவு இப்போது காணாதீங்க. மாத தவணை உங்களை திக்குமுக்காட வைத்து விடும்.* தங்கம் வாங்கி, அதில் சேதாரம், செய்கூலி என்று குறைவதை விட, ஓரளவு பணத்தை தங்க டெபாசிட் செய்யலாம்; மாத தவணை கட்டி வந்தால் தேவைப்படும் காலத்தில் தங்கமாக வாங்கலாம். முக்கிய செலவுகளுக்கு கைகொடுக்கும்.வருமான வரிக்காக...* வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் போது, சில முதலீடுகள் வரிவிலக்குக்கு கைகொடுக்கும். தேசிய சேம நல நிதி, காப்பீடு என்று பணத்தை சேமித்தால் வரியும் குறையும். சேமிப்பும் நிலைக்கும். * மருத்துவ காப்பீடு மிக முக்கியம். 50 வயதாகி விட்டால் கையில் ஒரளவு பணம் மருத்துவ செலவுக்காக ஒதுக்க வேண்டும். அதற்காக, காப்பீடு எடுப்பது மிக மிக முக்கியம்.

மூலக்கதை