உலகின் 'காஸ்ட்லி' நகரம்: சிங்கப்பூருக்கு 14வது இடம்

தினமலர்  தினமலர்

சிங்கப்பூர்: உலகின் காஸ்ட்லி நகரங்களின் வரிசையில் சிங்கப்பூர் இரண்டு இடங்கள் குறைந்து 14 வது இடத்தில் உள்ளது.


கடந்த ஓராண்டில் சிங்கப்பூர் இரண்டு இடங்கள் குறைந்து உலகின் 14 வது மிக ஹாஸ்ட்லி நகரமாக திகழ்கிறது, இது இப்போது ஆசியாவில் ஏழாவது காஸ்ட்லி நகரமாக உள்ளது என ஈ.சி.ஏ இன்டர்நேஷனல் தொகுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ஜப்பானிய நகரங்களான யோகோகாமா 10 வது இடத்திலும், ஒசாகா 12 வது இடத்திலும், நாகோயா 13 வது இடத்திலும் வந்து சிங்கப்பூரை முந்தியுள்ளது, மிக காஸ்ட்லியான நகரங்களில் ஹாங்காங், 5 வது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.


இது குறித்து ஈ.சி.ஏ இன்டர்நேஷனலின் ஆசியாவிற்கான அதன் இயக்குனர் லீ குவேன் கூறியதாவது: 2019 ஆம் ஆண்டில் ஹாங்காங்கின் அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை மற்றும் "கோவிட் -19 இன் தாக்கம் ஆகியவை வழிவகுத்த போதிலும்," நிச்சயமற்ற நிலையில் உலக தரவரிசையில் ஒரு சிறிய வீழ்ச்சி "மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிக காஸ்ட்லியான நகரமாக துர்க்மெனிஸ்தானில் உள்ள அஷ்கபாட் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நகரங்கள் மற்றும் இந்திய நகரங்கள் குறித்து சொல்லப்படவில்லை.

மூலக்கதை