'கொரோனா' இடையூறால் காசநோய் மரணம் அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்

லண்டன் : 'குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், 'கொரோனா' பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மருத்துவ இடையூறுகளால், எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா மரணங்கள் அதிகரிக்கும்' என, ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இது குறித்து, 'லான்செட்' மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள, ஆய்வு கட்டுரையில் கூறியிருப்பதாவது :கொரோனா பரவல் காரணமாக, உலகம் முழுதும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வழக்கமான மருத்துவ பணிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள், நோய் கண்டறிதல், சிகிச்சை உள்ளிட்டவற்றில், பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா மரணங்கள், 10 முதல், 36 சதவீதம் வரை உயரக்கூடும். சரியான நேரத்தில், நோயை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப் பட்டால் மட்டுமே, இந்த மரணங்களை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை