சென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020

தினமலர்  தினமலர்
சென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020

புதுடில்லி: ‛‛தோனி விரும்பியதால் தான் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன்,’’ என, பியுஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

இந்திய ‛சுழல்’ வீரர் பியுஸ் சாவ்லா 31. இதுவரை 3 டெஸ்ட் (7 விக்.,), 25 ஒருநாள் (32), 7 சர்வதேச ‛டுவென்டி-20’ (4) போட்டிகளில் விளையாடிய இவர், 2007ல் ‛டுவென்டி-20’ மற்றும் 2011ல் 50 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். தவிர இவர், ஐ.பி.எல்., தொடரில் 2012, 2014ல் கோப்பை வென்ற கோல்கட்டா அணியில் இடம் பெற்றிருந்தார்.

கடந்த 2012க்கு பின் சர்வதேச போட்டியில் பங்கேற்காத சாவ்லா, 13வது ஐ.பி.எல்., சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ. 6.75 கோடிக்கு சென்னை அணியில் ஒப்பந்தமானார். ஏற்கனவே 2018ல் நடந்த ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் இவரை சென்னை அணி ரூ. 4.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய முயற்சித்தது. ஆனால் கோல்கட்டா அணி இவரை தக்கவைத்துக் கொண்டது.

ஏற்கனவே சென்னை அணியில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர், மிட்சல் சான்ட்னர், ரவிந்திர ஜடேஜா என, முன்னணி சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் பியுஸ் சாவ்லாவை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இதுகுறித்து பியுஸ் சாவ்லா கூறுகையில், ‛‛இந்த ஆண்டு துவக்கத்தில் சென்னை அணியின் பயிற்சி முகாம் நடந்தது. இதில் தோனியிடம் கிரிக்கெட் தொடர்பான நிறைய விஷயங்களை ஆலோசித்தேன். அப்போது, என்னை சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து கேட்டேன். இதற்கு அவர், ‛உங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்’ என்று கூறினார்,’’ என்றார்.

மூலக்கதை