வெற்றிக்கு முன் வீழ்ச்சி * பிளாக்வுட் சோகம் ஏன் | ஜூலை 14, 2020

தினமலர்  தினமலர்
வெற்றிக்கு முன் வீழ்ச்சி * பிளாக்வுட் சோகம் ஏன் | ஜூலை 14, 2020

சவுத்தாம்ப்டன்: ‘‘விண்டீஸ் அணி வெற்றி பெறும் முன் அவுட்டானது ஏமாற்றமாக இருந்தது,’’ என பிளாக்வுட் தெரிவித்தார்.

இங்கிலாந்து, விண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடந்தது. இதில் விண்டீஸ் அணி வெற்றி பெற இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தியது. ‘டாப் ஆர்டர்’ சரிந்த நிலையில் ‘மிடில் ஆர்டரில்’ களமிறங்கிய பிளாக்வுட், 95 ரன்கள் எடுத்து உதவ, விண்டீஸ் அணி 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இதுகுறித்து பிளாக்வுட் 28, கூறியது:

முதல் டெஸ்டில் எங்கள் அணி வெற்றி பெறுவதற்கு முன், முக்கிய கட்டத்தில் அவுட்டானது எனக்குள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. நான் அவுட் ஆகிவிட்டேனே என்பதற்காக அல்ல, எனது அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லையே என்ற வருத்தம் அதிகம் இருந்தது. மற்றபடி சதம் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை