ஸ்டோக்ஸ் ‘பிரேக்’ பின்னணி | ஜூலை 14, 2020

தினமலர்  தினமலர்
ஸ்டோக்ஸ் ‘பிரேக்’ பின்னணி | ஜூலை 14, 2020

லண்டன்: உலக கோப்பை பைனலில் சூப்பர் ஓவருக்கு முன்  ஸ்டோக்ஸ் ‘சிகரெட்’ பிடித்தது தற்போது தெரியவந்தது.

உலக கோப்பை பைனல் (50 ஓவர்) கடந்த ஆண்டு லண்டன் லார்ட்சில் நடந்தது. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து மோதின. இரு அணிகளும் சம ரன்கள் (241) எடுக்க போட்டி ‘டை’ ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சம ரன்கள் (15) எடுத்தன. 

முடிவில் பவுண்டரி அதிகம் அடித்த அணி அடிப்படையில் இங்கிலாந்து கோப்பை வென்றது. இதற்கு ஸ்டோக்ஸ் 84 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக இருந்தது. இதனிடையே சூப்பர் ஓவருக்கு முன் ஸ்டோக்ஸ் ‘சிகரெட்’ பிடித்த தற்போது தெரியவந்தது.

 ‘மார்கன்ஸ் மென்’ என புத்தகத்தில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது. அதில்,‘ பைனலில் 2 மணி நேரம், 27 நிமிடம் பேட்டிங் செய்த ஸ்டோக்ஸ் மன அழுத்தத்தில் இருந்தார். சூப்பர் ஓவருக்கு முன் இதை குறைக்க எண்ணிய அவர் நேராக ‘டிரசிங்’ அறைக்கு சென்றார். ‘ஷவரில்’ தலையை வைத்து சிறிது நேரம் தன்னை குளிர்வித்த அவர், பின் சில நிமிடங்கள் ‘சிகரெட்’ பிடித்தார். அடுத்து கேப்டன் மார்கனிடம் பேசியபின் களத்தில் இறங்கினார். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மூலக்கதை