சவுதியில் ஹஜ் பெருநாளில் மசூதிகளில் மட்டுமே தொழுகை

தினமலர்  தினமலர்
சவுதியில் ஹஜ் பெருநாளில் மசூதிகளில் மட்டுமே தொழுகை

துபாய்: சவுதி அரேபியாவில், இந்த ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகையை மசூதிகளில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், திறந்த வெளிகளில் நடத்தக்கூடாது எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளதாவது: இம்மாத இறுதியில் துவங்கும் ஹஜ் பெருநாளிற்கான சிறப்பு தொழுகையை, மசூதிகளில் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மசூதிகள் அனைத்திலும், கொரோனா பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். திறந்த வெளிகளில் நடத்தப்படும் திடல் தொழுகைக்கு அனுமதியில்லை. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவலால், சவுதி அரேபியாவில் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மே 31 முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தி, மசூதிகளை திறந்தது சவுதி அரசு. நாட்டில் உள்ள 90 ஆயிரம் மசூதிகளிலும், கிருமி நாசினி தெளித்து, பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை